சித்தராமையா வலியுறுத்தல்

பெங்களூர் : ஜுன் 4 – சமூக வலைதளங்களில் எதிரான கருத்துக்களை பகிர்ந்துகொண்டு சமூக ஆரோக்கியத்தை பாழ்படுத்திவருகிறார். ரோஹித் சக்ரதீர்த்தா என்ற கயவனின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் மற்றும் கன்னட அபிவிருத்தி ஆணையத்திலிருந்தும் ரோஹித் சக்ரதீர்த்தாவை பிடுங்கி எறிய வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முதல்வரை வற்புறுத்தி உள்ளார். மாநில விரோதியை தலைவனாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள பாடங்களை ரத்து செய்து புதிய திருத்தப்பட்ட பாடங்கள் அமைக்கப்படும் வரை பழைய புத்தகங்களையே முன் தொடர வேண்டும். அரசு அடம் பிடிக்காமல் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டும். என சித்தராமையா தன் ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பாடங்கள் புணரமைப்பு ழுழுவிற்கு தகுதியற்றவர்களை நியமிப்பது மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விவாதங்களுக்கு மாணவர்கள் பலியாகியுள்ளனர். எந்த பாடத்தை படிக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்கள் மற்றும் எந்த பாடத்தை போதிக்க வேண்டும் என ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர். இதற்கெல்லாம் என்ன பரிகாரம் என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.