சித்ரதுர்காவில் கோர விபத்து 5 பேர் சாவு

சித்ரதுர்கா : செப்டம்பர். 11 – லாரி மீது கே எஸ் ஆர் டி சி பேரூந்து மோதியதில் பேரூந்தில் பயணித்த ஐந்து பேர் இறந்துள்ள சோக சம்பவம் இந்த மாவட்டத்தின் ஹிரியூரு தாலூகாவின் கொல்லஹள்ளி கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞசாலை 150ல் நடந்துள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை நடந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பெங்களூரை சேர்ந்த பார்வதம்மா (45) , ராய்ச்சூரு மாவட்டத்தின் மஸ்கி ஊரை சேர்ந்த ரமேஷ் (40) , மாணவி பகுதியை சேர்ந்த நரசப்பா (5) , ஆலப்புராவை சேர்ந்த ரவி (23) மற்றும் ராயச்சூரை சேர்ந்த மாபம்மா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளது. பார்வதம்மா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நாராசப்பா ரவை மற்றும் மாபம்மா ஆகிய மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளனர். நேற்று நள்ளிரவு ராய்ச்சூரிலிருந்து பெங்களூருக்கு புறப்பட்ட கே எஸ் ஆர் டி சி பஸ் தேசிய நெடுஞசாலை 150(ஏ)வில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 3.30 மணியளவில் சித்ரதுர்கா மாவட்டத்தின் ஹிரியூரு தாலூகாவின் கொல்லஹள்ளி கிராமத்தின் அருகில் சரக்குகளை ஏற்றி கொண்டு முன்னாள் சென்றுகொண்டிருந்த லாரி மீது பேரூந்து ஓட்டுனரின் அலட்சியம் மற்றும் அதிவேகத்தால் மோதியுள்ளது. இதன் விளைவாக பேரூந்தின் வலப்புறம் உட்கார்ந்திருந்த பார்வதம்மா மற்றும் ரமேஷ் ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படு காயங்களடைந்த நரசப்பா , ரவி மற்றும் மாபம்மா ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். தவிர பேரூந்தில் இருந்த மேலும் 8 பேர் படு காயங்கலடைந்துள்ளனர். சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனையில் 5 பேர் மற்றும் சல்லகெரே தாலூகா மருத்துவமனையில் 3 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட உயர் போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.