சித்ராமையாவை மறைமுகமாக விமர்சித்த எஸ்.எம்.கிருஷ்ணா

மண்டியா, நவ. 4- ஜாதி அடிப்படையில் முதல்வரை தேர்ந்தெடுப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மேலும் ஐந்தாண்டுகள் நானே முதலமைச்சராக இருப்பேன் என்று கூறுவது ஆரோக்கியமற்ற வளர்ச்சியாகும் என்று பிஜேபியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான எஸ். எம். கிருஷ்ணா முதல்வர் சித்தராமையாவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனிப்பட்ட சாதனை, திறமை, சமூக அக்கறை உள்ளவர்கள், முதல்வராக வேண்டும். ஜாதி அடிப்படையிலான அணுகுமுறை, ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும். ஒவ்வொரு அரசியல் சகாப்தத்திலும் திருப்புமுனைகள் உள்ளன. இதன் அடிப்படையில் நிலைகள் மாறும் என்றார்.
ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக இருப்பேன் என்று சொல்லும் ஆரோக்கியமற்ற நிலையை அடைத்து விட்டோம். இந்த கேள்வி இப்போது எழுப்ப வேண்டிய அவசியமே இல்லை. உயர் பதவியில் இருப்பவர்கள் நிதானமாக பேசினால் அனைத்து பிரச்சனைகளும் தீரும். இவ்வாறு அவர் கூறினார். ‘நான் ஐந்தாண்டுகள் முதல்வராக நீடிப்பேன் என முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்’.
இது பல்வேறு சிக்கல்களை உருவாக்கி விட்டது.