‘சின்ன கலைவாணர்’ விவேக்கின் வாழ்க்கை பயணம்


சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கிய விவேக் (59) 1961-ஆம் ஆண்டு கோவில் பட்டியில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த நடிகர் விவேக், 1986-92 ஆம் ஆண்டுகளில் தலைமை செயலக ஊழியராக பணியாற்றினார்.
1990-களில் பாலசந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். சிறந்த மேடைப் பேச்சாளர். விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார்.
மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார். 2009-ல் பத்ம ஸ்ரீ விருது விவேக்கிற்கு வழங்கப்பட்டது. நான் தான் பாலா, வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் விவேக் நடித்துள்ளார்.