சிமோகாவில் இதுவரை60 பேர் கைது – தடை உத்தரவு நீட்டிப்பு

ஷிவமோகா, அக். 3-
மிலாத் நபி ஊர்வலத்தில் ராகி குட்டா பகுதியில் நடந்த அசம்பாவித சம்பவத்தில் 4 பேருக்கு மேல் படுகாயம் ஏற்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமய்யா கூறுகையில், சட்ட மீறலாக கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதனை அரசு ஒருபோதும் பொருத்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக உள் துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வர் கூறுகையில், வன்முறை சம்பவங்கள் நடந்த இடம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் இதனை பிஜேபி தலைவர்கள் காங்கிரஸ் அரசு சட்டம் ஒழுங்கு காப்பாற்ற தவறியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த வன்முறை சம்பவங்களால் பல வாகனங்கள் நாசமானது பலரின் வீட்டு ஜன்னல்கள் உடைக்கப் பட்டது.
ஷிவமோகா போலீஸ் எஸ்.பி‌. மிதுன் குமார் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக 24 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபட செய்யப் பட்டுள்ளது.
ராகிகுட்டா பகுதியில் கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.