சிமோகாவில் பதட்டம்

சிமோகா,அக்..2-
சிமோகாவில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஈத் மிலாத் ஊர்வலத்தின் போது, ​​நேற்று மாலை மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வீடுகள் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். நிலைமை நீர் பூத்த நெருப்பாக இருந்தாலும் அமைதியான சூழல் நிலவுகிறது. தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஷிமோகாவின் புறநகர் பகுதியான சாந்திநகரின் ராகிகுடா பகுதியில் கல் வீச்சு நடந்து, விபரீதமாக மாறி வன்முறை ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தினர். வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளைத் தவிர, நகரின் முக்கியப் பகுதிகளிலும், பதற்றமான பகுதிகளிலும் கூடுதல் போலீஸாரை நியமித்தும், பாதுகாப்பை பலப்படுத்தியும் போலீஸார் கழுகுக் கண் வைத்துள்ளனர்.
ஈத் மிலாத் பண்டிகையை முன்னிட்டு ஷிமோகாவில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் ராகிகுட்டாவை அடைந்தபோது, ​​கட்அவுட் விவகாரம் தொடர்பாக இந்து மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு, விபரீதமாக மாறியது. அப்போது, ​​ஊர்வலத்தின் மீது மர்மநபர்கள் சிலர் கற்களை வீசித் தாக்கியதில், இரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கல் வீசித் தாக்கியதில், 7க்கும் மேற்பட்ட கார்கள், வீட்டின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
கல் வீச்சு காரணமாக சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, அவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் அனைவரும் உயிர் பிழைத்தனர். இச்சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஷிமோகாவின் சாந்தி நகரின், ராகி குட்டா பகுதியில் இந்த கல்வீச்சு சம்பவம் நடந்தது. இந்த வர்முறை சம்பவத்தை தொடர்ந்து போலீசார் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்கள்.இந்த கலவரம் நடந்த பகுதியில் தற்போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
எனவே அங்கு பாதுகாப் புக்காக கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
பிரம்மாண்டமான ஊர்வலத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஊர்வலம் ராகி குட்டா சென்றபோது, திப்பு சுல்தான் கட்அவுட் பிரச்சனை காரணமாக இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்திற்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது சிலர் கல்வீச்சு நடத்தியுள்ளனர். இதனால், இரண்டு மதத் தவனரின் இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.கல் வீசிய வன்முறை சம்பவத்தால், ஏழு கார்கள், பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன .இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .
காயம் அடைந்தவர்களை உடனடியாக அரசு மருத்துவமனை கொண்டு போய் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இச்சமூகம் தொடர்பாக இதுவரை 40பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை கைது செய்ய வாய்ப்புள்ளது என மூத்த போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக சிவில் போலீசார், வஜ்ரா, டி .ஏ .ஆர். ஆயுத படை போலீசார் குவித்துள்ளனர்.
சாலைகளில் வன்முறை சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே தடுப்புகள் போடப்பட்டுள்ளது.
பல கடைகள் மூடப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து வெளியே வந்தவர்களை வாபஸ் அனுப்பி வைத்துள்ளனர். நகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
போலீஸ் எஸ். பி., மிதுன் குமார், ராகி குட்டா பகுதியில் நேரில் சென்று பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளை கவனித்துள்ளார். மேலும் மாவட்ட கலெக்டர் செல்வமணி இந்த சம்பவத்திற்கான விவரங்களை அறிக்கையை பெற்றுள்ளார். அரசுக்கும் தகவல் அனுப்பி உள்ளார். இன்னும் அங்கு பதட்டம் குறைய வில்லை.