சிரியாவில் துருக்கி ஏவுகணை தாக்குதல்

சிரியா நவம்பர். 20 – சிரியாவின் வடக்கு மாகாணங்களை குறிவைத்து துருக்கி ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த குண்டு வெடிப்புக்கு சிரியாவைசேர்ந்த குர்தீஷ் அமைப்புதான் காரணம் என்று துருக்கி குற்றம் சாட்டிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலெப்போ, ஹசாரே மாகாணங்கள் மற்றும் சிரியா-
குர்தீஷ் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள கோபனே நகரில் தாக்குதல் நடந்தது. 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை துருக்கி ராணுவம் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.