சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்

டெல்லி: டிசம்பர். 11 – ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும்.. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சட்டம் தற்காலிகமானதே.. அந்த சட்டம் நிரந்தரமான வசதியை கொடுக்கும் சட்டம் கிடையாது. சுதந்திர போர் காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வசதி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மொத்தமாக இந்த வழக்கில் 3 தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. தலைமை நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பு, நீதிபதிகள் ஜே கவாய், சூர்யா காந்த் தீர்ப்பை ஒன்றாக வழங்குகிறார். நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் , நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனி தனியாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஆனால் இவர்கள் இருவருமே.. மற்ற 3 நீதிபதிகளின் தீர்ப்புடன் ஒத்துப்போவதாக அறிவித்துள்ளனர்.
தலைமை நீதிபதி வாசித்த தீர்ப்பில்: ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி இருக்கும் போது மத்திய அரசு அதில் முடிவுகளை எடுக்க கூடாது என்று கூற முடியாது. அப்படி கூறினால் அது.. அரசியலமைப்பு பணிகளை தடுக்கும். ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி இருக்கும் போது அங்கே மத்திய அரசு முக்கியமான பெரிய நடவடிக்கைகளை எடுக்க தடை விதிக்க முடியாது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது இந்திய அரசியலமைப்பின் 1 மற்றும் 370 வது பிரிவுகளில் இருந்து தெளிவாகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒரு விதி, அதிகார வரம்புகள் உள்ளன. அவர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிற்கான அதிகார வரம்புகள் உள்ளன. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு “இறையாண்மை” என்பது கிடையாது. இந்தியாவுடன் இணையும் போது காஷ்மீருக்கு இறையாண்மை இல்லை. காஷ்மீர் அரசியல் சாசனத்தில் இறையாண்மை இல்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சட்டம் தற்காலிகமானதே.. அந்த சட்டம் நிரந்தரமான வசதியை கொடுக்கும் சட்டம் கிடையாது. சுதந்திர போர் காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வசதி, என்று தலைமை நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை ஒப்புதல் இன்றி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதோடு இல்லாமல் ஜம்மு காஷ்மீர், லடாக் இரண்டும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. அங்கே இயல்பு நிலை திரும்பிய பின் யூனியன் பிரதேசங்கள் என்ற நிலை மாற்றப்பட்டு மாநில அதிகாரம் கொடுக்கப்படும். அதன்பின்னர் அங்கே சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் என்று அமித் ஷா உறுதி அளித்தார்.
உச்ச நீதிமன்ற வழக்கு: 2019 ஆகஸ்ட் மாதம் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்க உள்ளது. மொத்தமாக 2 கோரிக்கைகளை முன் வைத்து இந்த வழக்கில் பல்வேறு மனுக்கள் போடப்பட்டன.. ஒன்று சட்ட பிரிவு 370 ஐ நீக்கியது தவறு. இரண்டாவதாக.. ஒரு மாநில சட்டசபையின் அனுமதி இன்றி அதை பிரிப்பது, அதை யூனியன் பிரதேசம் ஆக்குவதும் தவறு. இந்த இரண்டையும் மையமாக வைத்து பல்வேறு மனுக்கள் போடப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 2, 2023 முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கத் தொடங்கியது. இந்த வழக்கை 16 நாட்களுக்கு விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 5ம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் மனோகர் லால் சர்மா, வி த சிட்டிசன்ஸ், டாக்டர் சாரு வாலி கண்ணா, முகமது அக்பர் லோன, ஹஸ்னாயின் மசூதி, ஷாகீர் ஷபீர், அனுராதா பாஷின் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் அடிப்படையிலேயே வாதங்கள் வைக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு; மனுதாரர்கள் சார்பில் கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், ராஜீவ் தவான், ஜாபர் ஷா, துஷ்யந்த் தவே உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனிடையே, மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, ராகேஷ் திவேதி, வி.கிரி மற்றும் பலர் ஆஜராகினர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. முக்கிய வாதங்கள்: சட்ட பிரிவு 370 விசாரணையின் போது, ​​ பின் வரும் வாதங்கள் எழுப்பப்பட்டன: > பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகுமா? > பிரிவு 370 நிரந்தரமாக இருக்க வேண்டுமா? > ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் செல்லுபடியாகுமா?, ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது சரியா? சட்டசபை அனுமதி வேண்டாமா? > ஜூன் 20, 2018 அன்று ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு முன் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? > டிசம்பர் 19, 2018 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஜூலை 3, 2019 அன்று நீட்டிக்கப்பட்டது சரியா? அங்கே எப்போது மீண்டும் சட்டசபை தேர்தல் நடக்கும் என்பது உள்ளிட்ட வாதங்கள், கேள்விகள் வைக்கப்பட்டன. இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.