சிறுசேமிப்பு திட்டங்களுக்கானவட்டி விகிதம் அறிவிப்பு

புதுடெல்லி செப்.30-
அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அஞ்சல் அலுவலகங்களில் ஒவ்வொரு காலாண்டும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு ஆண்டுதோறும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இதையடுத்து மத்திய நிதியமைச்சகம் நேற்று(செப்டம்பர்29) டிசம்பர் மாதத்திற்கான வட்டி விகிதத்தை வெளியிட்டது.
இதையடுத்து அஞ்சல் அலுவலகங்களில் டிசம்பர் மாதத்தில் 5 ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதி சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ஒரு ஆண்டுக்கான வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கின்றது.அதே போல 3 மற்றும் 2 ஆண்டுகளுக்கான வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் 7 சதவீதமாக உள்ளது. மேலும் 5 ஆண்டுக்கான வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கின்றது.
முத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர வருவாய் கணக்கு வட்டி விகிதம் 7.4 சதவீதமாகவும் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமில்லாமல் கிஷான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதம் என்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கான வட்டி வகிதம் 8 சதவிகிதம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.