சிறுத்தையுடன் போராடி உயிர் பிழைத்த விவசாயி

மண்டியா : மே. 30 – கரும்பு தோட்டத்துக்கு செல்லும்போது தாக்கிய சிறுத்தையுடன் போராடி விவசாயி ஒருவர் தன் உயிரை காப்பாற்றிக்கொண்ட அதிசய சம்பவம் மததூர் தாலூகாவின் ஹெச் ஓசூரு என்ற கிராமத்தில் நடந்துள்ளது. திடீரென தாக்கிய சிறுத்தையுடன் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் போராடி தன் உயிரை காப்பாற்றிக்கொண்ட விவசாயி ஜெகதீஷ் என்பவருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டு மாவட்ட மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர் நிலைமை கவலைக்க்கிடமாயிருப்பதாக தெரிய வருகிறது. ஹெச் ஓசூரு கிராமத்திலிருந்து அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு ஜெகதீஷ் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது சிறுத்தை திடீரென தாக்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக ஹொசஹள்ளி கெம்பூதன கெரேவில் சிறுத்தை நடமாடி வருவதுடன் அது மூன்று ஆடுகளையும் இழுத்து சென்றுள்ளது. வன துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருப்பினும் அவர்கள் அலட்சியம் காட்டுவதாக கிரமத்தார் தெரிவித்தனர். கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என கிராமத்தார் வற்புறுத்திவருகின்றனர்.