சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பு

பெங்களுர் : நவம்பர். 21 -பெங்களூர் நகரின் புறப்பகுதி நெலமங்களாவில் சிறுத்தை ஒன்று திரிந்து வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளநிலையில் இந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள பெங்களூர் கிராமந்தர வன துறை அதிகாரிகள் இந்த சிறுத்தையை பிடிக்க ஒன்பது கூடுகளை அமைந்துள்னர். ஆனாலும் சிறுத்தை வீதியைக்கடந்தது குறித்த சிசி டிவி கேமரா காட்சிகள் தெளிவாக இல்லையென்றும் தெடர்ந்து சிறுத்தைகள் குறித்து தங்களுக்கு புகார்கள் வருவதால் இது விஷயமாக ஒன்பது கூண்டுகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு சிவகங்கே பகுதியின் எலெஹாதனஹள்ளி மற்றும் இதர கிராம பகுதிகளிலிருந்து புகார்கள் வந்துள்ளது . இந்த நிலையில் அந்தந்த இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைத்துளோம். நெலமங்களா , டாபர்ஸ்பேட் , தோட்டபெலவங்களா மற்றும் சோளதேவனஹள்ளி ஆகிய வனப்பகுதிகளில் சிறுத்தை திரிந்து கொண்டிருப்பதாக புகார்கள் வந்திருந்தும் இதற்கான சாட்சிகள் இல்லை . என வன துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமீப காலமாக பெங்களூரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது பெங்களூர் புறநகர் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து சிறுத்தைகள் நகருக்குள் நுழைகிறது குறிப்பாக மக்கள் குடியிருப்பு பகுதிகள் சிறுத்தைகள் நடமாடும் பகுதிகளாக மாறி வருகிறது இதனால் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் பயம் பீதி அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் சிறுத்தைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராத வகையில் வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை விடுத்து வந்தனர் இந்த நிலையில் மீண்டும் ஒரு சிறுத்தை நடமாட்டம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது