சிறுத்தை அல்ல காட்டுப் பூனை

பெங்களூர், ஜன. 14-
பெங்களூர் ஞானபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாடியது என்ற டிவி சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பரப்பை பீதியை ஏற்படுத்தியது. ஆனால் அது சிறுத்தை அல்ல. காட்டுப் பூனை என்பது தெரிய வந்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் சிறுத்தை ஒன்று நடந்து செல்வதாக டி.வி. சேனல் ஒன்றில் செய்தி ஒளிபரப்பானது.
சிறுத்தை உறும்புவது போல சப்தத்தையும் செயற்கையாக சேர்க்கப்பட்டு ஒளிபரப்பானது. அது நிஜமானது அல்ல என்று
வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்படியானால், அங்கு நடமாட்டத்தில் இருப்பது என்ன என்பது சுற்றுப்புற பகுதினருக்கு சந்தேகத்தை எழுப்பியது.
அங்கு அவ்வப்போது காட்டுப் பூனைகள் வந்து செல்வது வழக்கம் எனவே அது சிறுத்தை அல்ல காட்டு பூனை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தேவை யில்லாமல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.