சிறுத்தை சிக்கியது

மைசூர் : டிசம்பர். 8 – சிறுத்தையை சிறைபிடிக்க வைத்த கூண்டில் தாய் சிறுத்தை பிடிபட்ட நிலையில் ஆயரஹள்ளி கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் நகரின் புறப்பகுதியில் உள்ள ஆயரஹள்ளி கிராமத்தில் கழனியில் கரும்பு அறுவடை செய்து கொண்டிருந்தபோது மூன்று சிறுத்தை குட்டிகள் தென்பட்டது. இது குறித்து கிராம மக்கள் வன துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர்
. பின்னர் வந்த வன துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளை மீட்டு தாய் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். அதன்படி நேற்று இரவு குட்டிகளை தேடி வந்த தாய் சிறுத்தை வனத்துறை இட்ட கூட்டுக்குள் சிக்கியுள்ளது. பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.