சிறுத்தை தோல் விற்பனை 3 பேர் கைது

சிக்கமகளூர் : ஜூன். 10 – சாலை ஓரத்தில் நின்று சிறுத்தை தோல் விற்க முயற்சித்த மூன்று குற்றவாளிகளை வனத்துறை நடமாடும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தாவராவை சேர்ந்த பர்வதா , ஏ பி எம் சி மார்க்கெட்டில் எழுத்தர் பணியாற்றும் காந்தராஜ் மற்றும் தாவணகெரே மாவட்டத்தின் ஜகளூரு தாலூகாவின் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள். குற்றவாளிகள் சிறுத்தை சருமத்தை கடந்த வருடம் இறந்துபோன ஒரு நபரிடம் இருந்து வாங்கி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. அன்றுலிருந்தே சிறுத்தை சருமத்தை விற்க தகுந்த வாடிக்கையாளரை தேடி வந்திருப்பினும் எவரும் கிடைக்க வில்லை. இந்தாவரா தொழிற்பேட்டை மலைநாடு சமுதாய பவன் அருகில் நின்று வாடிக்கையாளருக்காக இவர்கள் காத்திருக்கும் நம்பகமான தகவலின் பேரில் சோதனை நடத்திய வனத்துறை நடமாடும் போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை மடிகேரி வன பிரிவின் எஸ் பி சந்திரகாந்த் தலைமையில் எடுக்கப்பட்டுள்ளது .