சிறுமிக்கு சாக்லேட் ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்: இருவர் கைது

பெங்களூரு, ஏப் .29‍ சிறுமிக்கு சாக்லேட் மற்றும் பொம்மைகளை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவரை காடுகோடி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சச்சின் மற்றும் சேகர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஏப். 24ஆம் தேதி காடுகோடி காவல்நிலையத்தில் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.பாதிக்கப்பட்ட சிறுமி காடுகோடி காவல் நிலையப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.குற்றம் சாட்டப்பட்டவர்களும் அருகிலேயே வசித்து வந்தன‌ர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாக்லேட் மற்றும் பொம்மையை தருவதாக உறுதியளித்து அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படடதை அறிந்த‌ அப்பகுதி மக்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், அப்பகுதி மக்களுடன் பெற்றோர்கள் குற்றவாளியின் வீட்டிற்குள் நுழைந்து, சிறுமியை மீட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை தாக்கி, பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.