சிறுமியை கற்பழித்த கொடூர தந்தை மகன் கைது

பெங்களூர் : ஆகஸ்ட். 16 – ஐந்து வயதே உள்ள பால் மனம் மாறாத சிறுமியை எந்த தயவு தாட்சண்யமின்றி கற்பழித்த தந்தை மற்றும் அவனுடைய சிறுவன் மகனை காமாட்சிபாள்யா போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ ( சிறுமிகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு சட்டம் ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுங்கதகட்டவை சேர்ந்த சந்தனா லே அவுட்டில் வசித்து வந்த ஆர். நாகராஜ் மற்றும் அவனுடைய 17 வயது மகன் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற கைதுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர் . குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் உறவினர்களாயிருப்பதுடன் நாகராஜ் கல் குவாரி ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்ததுடன் இவருடைய மகன் தனியார் கல்லூரி ஒன்றில் பி யு சி படித்து வந்துள்ளான். சிறுமியின் தாய் வேலைக்கு செல்லும்போது குற்றவாளி நாகராஜின் வீட்டில் மகளை விட்டு சென்றுவந்தார். சமீப நாட்களாக சிறுமியின் நடத்தையில் வித்யாசங்கள் காணப்பட்டுள்ளது. இதை கவனித்த தாய் சிறுமியிடம் விசாரித்த போது குற்றவாளிகள் தனக்கு அளித்த பாலியல் கொடுமைகள் குறித்து சிறுமி தன் தாயிடம் விவரித்துள்ளாள்.பின்னர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்ட போது அவள் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காமாட்சிப்பாளையா போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.