சிறுமியை மிரட்டி 6 மாதம் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

ஆந்திரா, மே. 13- ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும் அவரது தந்தையும் அங்கு உள்ள கோவிலில் பிச்சை எடுத்து வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செம்பு என்பவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி நண்பர்களிடமும் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதாக சிறுமியை செம்பு மிரட்டியதாக தெரிகிறது.வனது மிரட்டலுக்கு பயந்த சிறுமி ஒத்துக்கொண்டு உள்ளார். இதையடுத்து செம்புவின் நண்பர்கள் பலர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். கடந்த 6 மாதங்களாக இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது.