சிறுமி கூட்டு பலாத்காரம்

மும்பை, செப்டம்பர் . 26 -வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டி 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். தனியாக இருந்த சிறுமி மும்பை முல்லுண்டு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 21 வயது வாலிபர், நண்பருடன் சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்தார். அவர்கள் கத்தி முனையில் மிரட்டி சிறுமியை கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பியோடினர். பெற்றோர் வீடு திரும்பிய பிறகு சிறுமி தனக்கு நடந்த அவலம் குறித்து கூறினார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சில மணி நேரங்களில் வாலிபரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடிவருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமி கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.