சிறுமி தற்கொலை

பெங்களூரு, நவம்பர் 10-
கலாசிபல்யாவில் மைனர் பெண் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு பெற்றோர் சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த ஷர்மிளா (16) என்ற சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமியின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. செய்தி கிடைத்தவுடன், கலாசிபல்யா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.