சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்

ஜான்சி (உ.பி.,) ஆக.14- உத்தரப் பிரதேசம் மாநிலம், ஜான்சி நகரில், ஏழு வயது சிறுவன் பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில், தெரு நாய்கள் சூழ்ந்து பயங்கரமாக கடித்து குதறி உள்ளது.
இக்காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி யுள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். ஜான்சி நகர், போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ,ஜார்ஜ் கார்டியா, நர்சிங் ராவ் டோரியாவில் வசிக்கும் ஏழு வயது சிறுவன் விராஜ். இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரின் வீட்டு அருகே சென்ற போது, தெரு நாய்கள் சூழ்ந்து பலமாக கடித்து குதறியது. வலி தாங்க முடியாத சிறுவன், அலறி கூச்சலிட்டதால் மகனின் குரல் கேட்ட தாய் ஓடி வந்தார். தெரு நாய்களை விரட்டி அடித்தார்.
இதில் யுவராஜ் உயிர் தப்பினார். பலத்த காயமடைந்த விராஜை பெற்றோர், உறவினர்கள்,
உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை சூழ்ந்து தெரு நாய்கள் கடித்த காட்சி சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்தது.
அதை பார்த்த அப்பகுதி மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து விராஜின் தாய் கூறுகையில், இப்பகுதியில் இறைச்சியை நாய்களுக்கு கொண்டு வந்து கொட்டுவதால் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. தெரு நாய்கள் இங்குள்ள வீடுகளில் வசிப்போரை கடித்துத் தாக்குகிறது.
இதனால் நகராட்சியில், போலீசில், புகார் செய்திருக்கிறோம்.
உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், இங்குள்ள அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.
ஜான்சி அபோட் மார்க்கெட், தல்பூர் சிவில் லைன், சிப்ரி பஜார் ,கோவிந்த சௌராஹா, உள்பட பல இடங்களில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
ஆனால், தெருநாய்களை கட்டுப்படுத்த இனப்பெருக்கத்தை தடுக்க இங்குள்ள மாநகராட்சி கண்டுகொண்டதாக தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.