சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு எதிராக போலீசார் நடவடிக்கை

பெங்களூர் : பிப்ரவரி . 2 – நகரில் முதல் முறையாக போக்குவரத்து போலீசார் கல்லூரி வளாகங்களில் சிறப்பு மேற்பார்வை மேற்கொண்டு போக்குவரத்து நியமங்களை மீறிய 800 வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். சிறுவர்களுக்கு இருசக்கர வானங்களை கொடுத்து போக்குவரத்து விதிகளை மீறியுள்ள நிலையில் சிறுவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் முன்னர் அவர்களுக்கு பெற்றோர் போக்குவரத்து நியமங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். நகரின் 23க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நடத்திய சோதனைகளில் மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் ஓட்டுதல் உரிமை சான்றிதழ் இல்லாமல் ஒட்டி இருப்பதுடன் இதை கவனித்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு 23 கல்லூரிகளின் 800 வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். தவிர சாலை போக்குவரத்து விதிகள் குறித்து மாணவர்களுக்கிடையே சுற்றறிக்கை அனுப்புமாறும் கல்லூரி நிர்வாகங்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதில் தவறும் கல்லூரி நிர்வாகங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் போலீசார் எச்சரித்துள்ளனர். இப்போது வெறும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . இந்த குற்றங்கள் மீண்டும் தொடர்ந்தால் இ பி கோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.