
பெங்களூர் : மே. 26 – சிறையிலிருந்து சில நாட்களுக்கு முன்னர்தான் விடுதலையாகி வந்திருந்த ஒருவனை அவனுடைய நண்பர்களேசாதாரண காரணத்திற்க்காக கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் மஹாதேவபுராவில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. ரேணுகுமார் (24) என்பவர் கொலையுண்டவன். இந்த கொலையை செய்த பிரஷாந்த் , ஸ்ரீகாந்த் மற்றும் வசந்தகுமார் ஆகிய மூன்று பேரை மஹாதேவபுரா போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேணுகுமார் கொலை முயற்சி , திருட்டு மற்றும் தாக்குதல் உட்பட ஏழு வழக்குகளில் குற்றவாளியாவான் . சமீபத்தில்தான் சிறையிலிருந்து விடுதலையாகை வெளியே வந்த ரேணுகுமார் நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என ஸ்ரீகாந்தமற்றும் பிரஷாந்தை மிரட்டியுள்ளான். தனியாக நீங்கள் ஏதாவது செய்தால் உங்களை விட மாட்டேன். என்றும் அவர்களை மிரட்டியுள்ளான். நான் சிறைக்கு சென்று வந்துள்ளேன் எனவே இனி நானே உங்கள் பாஸ் . என்றும் ரேணுகுமார் இருவரையும் மிரட்டியுள்ளான் . இதே போல் நேற்றும் ஸ்ரீகாந்த் மற்றும் பிரஷாந்தை ரேணுகுமார் மிரட்டியுளான். இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் இருவரும் ரேணுகுமார் உயிருடன் இருந்தால் நம் கதையை முடித்து விடுவான். இதனால் நாமே அவனை முடித்து விட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி ஸ்ரீகாந்த் , பிரஷாந்த் பங்கார்பேட்டை சேர்ந்த நண்பன் வசந்த் என்பவனை உடன் சேர்த்துக்கொண்டு நேற்று நள்ளிரவு ரேணுகுமாரை அழைத்துக்கொண்டு முதலே திட்டமிட்டபடி ரேணுகுமாரை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர். இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட மஹாதேவபுரா போலீசார் கொலையாளிகள் மூன்று போரையும் கைது செய்துள்ளனர்.