சிறையில் உள்ள கணவனை வெளியே எடுக்க போதைப் பொருள் விற்ற மனைவி கைது

பெங்களூர்: ஜூன். 17 – போதை பொருள் விவகாரமாக சிறைக்குள் உள்ள கணவனை ஜாமீனில் விடுவிக்க வழக்கறிஞருக்கு பணம் கொடுக்க தானும் போதை பொருள்கள் விவகாரத்தில் இறங்கிய வெளிநாட்டு பெண் ஒருவரை பானஸ்வாடி போலீசார் கைது செய்துள்ளனர் . மஹாதேவபுராவில் வசித்துவந்த டான்ஜீனியா நாட்டை சேர்ந்த பாத்திமா ஒமேரி என்பவர் கைது செய்யப்பட்ட பெண்ணாவார் . இவரிடமிருந்து 1.5 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள 13 கிராம் எம் டி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன . கம்மனஹள்ளி வீதி ஜல வாயு விஹார் அருகில் குற்றவாளி போதை பொருளை விற்க முயற்சித்தபோது நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் இவரை கைது செய்துள்ளனர் என டி சி பி பீமாசங்கர் குலேத் தெரிவித்தார் . 2018ல் டான்ஜீனியாவிலிருந்து சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த பாத்தீமா மஹாதேவபுராவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். எளிதில் பணம் சம்பாதிக்க பாத்தீமா தம்பதி போதை பொருள் விவகாரத்தில் ஈடுபட்டனர் சில மாதங்களுக்கு முன்னர் போதை பொருள் விற்ற வழக்கில் அவளுடைய கணவனை சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்தனர் . பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள கணவனுக்கு ஜாமீன் கொடுக்க அலைந்துகொண்டிருந்த பாத்தீமா இதற்க்கு தேவையான செலவுகளுக்கு பணம் சேகரிக்க தானும் போதை பொருள்கள் விவகாரத்தில் ஈடுபட்டு இப்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்