சிறையில் உள்ள தாய் சார்பில் நோபல் பரிசு பெற்ற குழந்தைகள்

ஓஸ்லோ: டிச.11-
ஜெர்மனியின் ஓஸ்லோ சிட்டி ஹாலில் நோபல் பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.இந்த ஆண்டுக்கானஅமைதிக்கான நோபல் பரிசு ஈரான் சமூக ஆர்வலரும், பெண்களின் உரிமை மற்றும்சுதந்திரத்துக்காக போராடி வரும் நர்கீஸ் முகமதுக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2021-ல் நர்கீஸ் முகமதுவை ஈரான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.இதையடுத்து,அமைதிக்கான நோபல் பரிசை அவர் நேரடியாகபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக, நர்கீஸின்இரட்டை குழந்தைகள்17வயதான அலி மற்றும் கியானி ஆகியோரிடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அதற்கு முன்னதாககியானி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெண்களின் சுதந்திரத்துக்காக போராடுவது மதிப்புக்குரிய விசயம்.வெற்றியை மட்டுமே நம்பி நாம் இந்த போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.ஏனெனில் இது விலைமதிப்பற்றது.நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்காக எனது தாயாரின் சுதந்திரத்தை ஈரானிய அதிகாரிகள் மேலும் பறிக்ககூடும்.எங்களது அம்மாவை நாங்கள் இறுதிவரை சந்திக்க முடியாமல் கூட போகலாம்.ஆனால்,அவர் என்றும் எங்கள் இதயத்தில் இருப்பார் என்றார்.