சிலிண்டர் வெடித்து இரண்டு பேர் காயம்

பெங்களூர்: செப்டம்பர். 3 – சமையல் எரி வாயு சிலிண்டர் கசிவால் வெடித்து இரண்டு பேர் காயமடைந்திருப்பதுடன் ஒருவரின் நிலை கவலைக்கிடமாயுள்ள சம்பவம் குமாரசாமி லே அவுட்டின் எலசேனஹள்ளி அருகில் நடந்துள்ளது . இந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த பீஹாரை சேர்ந்த கௌதம் , மண்டில் , பெண்மணி சோனி ஆகியோரை விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ககாயமடைந்த இரண்டு பேர் செக்யூரிட்டி பணி செய்துவந்ததுடன் இன்று அதிகாலை சமையல் செய்ய சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. தகவல் அறிந்த உடனேயே குமாரசாமி லே அவுட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரிசீலனை செய்து நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.