சிலிண்டர் வெடித்து தாய், மகன்கள் காயம்

நாசிக், ஜன. 10- நாசிக் ரோடு லோகன்தே மலே பகுதியை சேர்ந்தவர் சுகந்தா கிரண்(வயது 24). இவர் நேற்று காலை 7.30 மணி அளவில் டீ போட்டு கொண்டு இருந்தார். அப்போது, திடீரென அவரது வீட்டில் இருந்து கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் அந்த வீட்டின் தகர மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இந்த விபத்தில் சுகந்தா கிரண் மற்றும் அவரது 7 வயது மகன் ஆர்யன் காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் சுகந்த கிரண் 50 சதவீத தீக்காயத்துடனும், அவரது மகன் ஆர்யன் 15 சதவீத தீக்காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தாயின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அந்த பெண்ணின் மற்ற 2 மகன்களும் லேசான காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.