சில மாநிலங்களில் கனமழை

புதுடெல்லி: டிசம்பர். 6 – தமிழகம், ஆந்திராவில் பலத்த சேதங்களை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் வலுவிழந்துவிட்டதாகவும் இருப்பினும் இன்றும் (டிச.6) ஒருசில மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் வலுவிழது காற்றழுத்த தாழ்வு மண்டலமான நிலையில் அது மேலும் வலுவிழந்து இன்னும் ஒருசில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு நிலையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் இன்று (டிச.6) தெலங்கானா, சத்தீஸ்கர், தெற்கு கடலோர ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால், ஆந்திராவில் பல ஏக்கர் விவசாய பயிர்கள் நாசம் அடைந்தன. நெல்லூர் மற்றும் திருப்பதி ஆகிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், மிக்ஜாம் புயல் வலுவிழது காற்றழுத்த தாழ்வு மண்டலமான நிலையில் அது மேலும் வலுவிழந்து இன்னும் ஒருசில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு நிலையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.