சிவில் கான்ட்ராக்டரை கடத்திய ரவுடி உட்பட 4 பேர் கைது

பெங்களூர் : நவம்பர். 6 – வாங்கிய கடனுக்கு கமிஷன் கொடுக்கவில்லை என மிரட்டி சிவில் குத்தகையாளரை கடத்தி சென்று பணத்திற்க்காக லாட்ஜில் அடக்கிவைத்திருந்த பிரபல ரௌடி உட்பட நான்கு பேரை கே ஆர் புரம் போலீசார் கைது செய்துள்ளனர். சிவில் குத்தகையாளர் முரளி என்பவரின் வீட்டுக்கே சென்று மிரட்டிய குற்றவாளிகள் அவரை கடத்திச்சென்ற பீன்யா மற்றும் கலாசிபால்யா பகுதியின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆனந்த் மற்றும் அவனுடைய சகாக்கள் வினோத் , இந்த கடத்தலுக்கு உதவி புரிந்த அஜய் மற்றும் லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு உதவியாய் இருந்த மற்றொரு குற்றவாளி தப்பியோடியுள்ளான். அவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சஞ்சய் நகரை சேர்ந்த முரளி ரியல் எஸ்டேட் தொழிலுடன் சிவில் குத்தகையாளர்கவும் பணியாற்றிவந்துள்ளார். குத்தகை பணிகளை நிறைவேற்றுவதற்காக பையப்பனஹள்ளியில் உள்ள ராஜமணி என்பவரிடம் 60 லட்ச ரூபாய் கடன் தருமாறு 2022ல் முரளி கேட்டுக்கொண்டிருந்தார். ராஜாமணியும் பல்வேறு வங்கிகளிலிருந்து கடன் பெற்று 60 லட்ச ரூபாயை முரளிக்கு கொடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த டி சி பால்யாவை சேர்ந்த ஆனந்த் முரளியிடம் என்னுடைய எஜமான் ராஜமணியிடமிருந்து கடன் வாங்க சிபாரிசு பெற்றுள்ளயா , இதற்கு எங்களுக்கு 20 லட்சம் கமிஷன் தர வேண்டும் என போன் செய்து மிரட்டியுள்ளான் . இந்த விஷயமாக முரளி மற்றும் குற்றவாளிகளுக்கிடையில் அடிக்கடி தகராறுகள் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 18 அன்று சஞ்சய் நகரின் முரளி வீட்டுக்கு சென்று இது குறித்து பேச வேண்டும் என கூறி முரளியை காரில் உட்காரவைத்து கடத்தி சென்று கே ஆர் புறம் அருகில் ஒரு தனியார் லாட்ஜில் தங்க வைத்து சுமார் 10 நாட்கள் முரளியை மிரட்டி இருப்பதுடன் தாக்குதலும் நடத்தி சுமார் 7 லட்சம் ருபாய் வரை முரளியின் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுள்ளனர். இது குறித்து தங்களுக்கு புகார் வந்த பின்னர் வழக்கு பதிவு செய்துகொண்ட போலீசார் குற்றவாளிகள் நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதில் ரௌடி பட்டியலில் உள்ள ஆனந்துக்கு எதிராக 12 வழக்குகள் நகரின் பல்வேறு போலீஸ் நிலயங்களில் நிலுவையில் உள்ளனஎன போலீசார் தெரிவித்துள்ளனர்.