பீஜிங், ஆக. 14 சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிர்ழந்தனர். மேலும் 16 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.