சீனாவில் குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு

பீஜிங், ஆக 3- நவீன உலகில் செல்போன் இன்றியமையாகி விட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை,
மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் குழந்தைகளிடம் செல்போன்களை கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் செல்போன்களை குழந்தைகள் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இது தொடர்பாக சீனாவின் செல்போன் கட்டுப்பாட்டாளர் அமைப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்போன பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.