சீனாவில் தொழிற்சாலையில் தீ விபத்து – 36 பேர் பலி

பீஜிங், நவம்பர் 22 – சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். வென்பெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங் நகரில் கைசிண்டா வர்த்தக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 2 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.