சீனாவில் பொருளாதார நெருக்கடி

பெய்ஜிங்: ஜனவரி 13
கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்முறையாகச் சீனாவின் இறக்குமதி குறைந்துள்ளது. சீனா எந்தளவுக்கு ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. கடந்த சில தலைமுறைகளாகவே படுவேகமாக வளர்ந்து வந்த நாடுகளில் ஒன்று சீனா.. அமெரிக்காவுக்குப் பிறகு இப்போது இரண்டாவது பெரிய பொருளாதாரமாகச் சீனா இருக்கிறது. ஆனால், இப்போது சில காலமாகச் சீனாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. ஏற்றுமதி குறைவு: இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாகச் சீனாவின் மொத்த ஏற்றுமதி குறைந்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி 2022இல் $3.59 டிரில்லியனில் இருந்த நிலையில், அது கடந்த 2023இல் 4.6 சதவீதம் சரிந்து 3.38 டிரில்லியன் டாலராக இருக்கிறது. சீனாவின் ஏற்றுமதி கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாகக் குறைந்துள்ளதைச் சீனாவின் சுங்கத் துறை வெளியிட்ட தரவுகளில் தெரிகிறது.
கடந்தாண்டு ஏற்றுமதி மட்டுமின்றி இறக்குமதியும் கூட சீனாவில் கடந்தாண்டு குறைந்துள்ளது. சீனாவின் இறக்குமதி கடந்த ஒரே ஆண்டில் 2.5 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த 2022 உடன் ஒப்பிடும் போது 5.5% குறைவாகும். 2022இல் 2.7 டிரில்லியன் டாலராக இருந்த இறக்குமதி கடந்தாண்டு 2.2 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது. சீன அதிபர்: மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலையின்மை காரணமாக நாட்டின் பொருளாதாரம் சவால்களைச் சந்தித்து வருவதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு தினத்தன்று ஒப்புக்கொண்ட நிலையில், இப்போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.