சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவின்மெகா திட்டம்

டெல்லி:பிப். 15-இந்திய பிரதமர் UAE சென்றுள்ள நிலையில் பாரத் மார்ட் என்னும் அரசின் சொந்த கிடங்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மண்ணில் நிறுவ திட்டமிட்டுள்ளது. சீனாவுடன் அனைத்து முனையிலும் போட்டிப்போடத் தயாராகியிருக்கும்
இந்தியா-வின் முக்கியமான முயற்சி தான் இந்த பாரத் மார்ட். சீனா டிராகன் மார்ட் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வரும் வேளையில், இதேபோன்ற திட்டத்தை இந்தியாவும் அறிவித்துள்ளது.
பாரத் மார்ட் என்பது ஒரே கூரையின் கீழ் ஏற்றுமதியாளர்கள் பல்வேறு வகையான பொருட்களை வர்த்தகர்களுக்குக் காட்சிப்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த தளமாகும். இந்திய அரசு பாரத் மார்ட் திட்டத்தின் கான்செப்ட்-ஐ இன்னும் இறுதி செய்யாத நிலையில் முழுமையான விபரம் வெளியாகவில்லை. இந்த வசதி 2025க்குள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.