சீனா: உணவகத்தில் வெடிவிபத்து – ஒருவர் பலி

பீஜிங், ஜுன் 1- சீனாவின் ஹூமன் மாகாணம் ஷங்ஷா நகரில் நூடுல்ஸ் உணவகம் உள்ளது. அந்த உணவகத்தில் இன்று காலை ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். சில வாடிக்கையாளர்களும் உணவகத்தில் இருந்தனர். இந்நிலையில், உணவகத்தில் காலை 6.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் உணவகத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.