சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் ஹெச்.எஸ்.பிரனோய்

ஷென்சென், நவ. 22- சீனா மாஸ்டர் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுமுதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், 12-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் சோ டியான் செனை எதிர்த்து விளையாடினார்.
50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனோய் 21-18, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.மகளிர் ஒற்றையர் பிரிவு முதல்சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 12-21,14-21 என்ற நேர் செட்டில் சீனாவின் ஜாங் யீ மானிடம் தோல்வி அடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-10 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் பென் லேன், சீயன் வென்டி ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தது.