சீரக நீரின் பலவகை பயன்கள்


நம் நாட்டின் அனைத்து சமையல் அறைகளிலும் தென்படும் பதார்த்தங்களில் மிகவும் முக்கியமானது என்றல் அது சீரகம் தான் . இதை போட்டு செய்யும் மசாலாக்கள் பல மருத்துவ உபயோகங்களையும் கொண்டுள்ளது. சீரகம் அளிக்கும் இன்னொரு பயன் என்றால் அது உடல் எடையை குறைப்பது. நமக்கு தெரிந்த வகையில் சீரகம் ஒரு முழுமையான ஆரோக்கிய பயன்களை கொண்டது. இது நம் ஜீரண கிரியைக்கு அமிர்தம் போன்றது. உடலின் நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி நம் சரும ஆரோக்கியத்திற்கும் அவ்வளவே நல்லது. நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராயிருந்தால் சீரக நீரை விட சிறந்த மருந்து இல்லை. சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் கொழுப்பை எரிக்கும் நடவடிக்கையை வேகப்படுத்தும். என சொல்லப்படுகிறது. இதனால் உடல் எடையை குறைப்பதற்கு சீரகம் மிகவும் உதவுகிறது என்பது பலருக்கு தெரியாமலேயே பல் உடற்பயிற்சிகள் மருந்துகள் உட்கொண்டு வருகின்றனர். அத்தகையவர் இனி சீரகத்தை தாராளமாக பயன் படுத்தி அதன் விளைவை அறியலாம். குறிப்பிட்ட அளவுடன் சீரகத்தை சேர்த்துக்கொண்டால் உணவு எளிதில் ஜீரணிக்க சீரகம் மிகவும் உதவும்.
சீரகத்தில் உள்ள கேலோரிகள் மற்றும் எத்தனை முறை குடிப்பது நல்லது ?
சீரகம் நல்ல ஜீரண சக்தி ஏஜெண்டாய் இருப்பதால் இதை எத்தனை முறையாவது குடிக்கலாம். ஆனாலும் இது உங்களுடைய நோக்கம் மற்றும் தேவைகளை பொறுத்தது. நீங்கள் ருசிக்கேற்ப உட்கொண்டால் எத்தனை முறையாவது எடுத்துக்கொள்ளலாம். சற்றே அதிகமானாலும் அதனால் எந்த பின்விளைவோ பாதிப்போ கிடையாது. உடனடியாக உடல் எடையை குறைக்க ஒரு நாளைக்கு மூன்று முறையாவது சீரக நீரை குடிக்கலாம். காலையில் எழுந்தவுடனும் மதியம் உணவுக்கு முன்னரும் மற்றும் இரவுகளில் உணவுக்கு பின்னரும் சீரக நீர் குடிப்பது நல்லது.
சீராக நீரை குடிக்கும் முறைகள்:
தினமும் ஒரே மாதிரியான நீரை குடிப்பது சிலருக்கு அலுப்பு தட்டலாம். இதற்கு எளிதான கஷாயம் மற்றும் இதில் சேர்க்கும் பொருட்களால் வித்தியாசப்படுத்தி குடிக்கலாம். இந்தவகையில் ருசியை மாற்றியும் குடிக்கலாம். சீரக நீருடன்
லவங்க பொடியை சேர்த்துக்கொள்வதும் ஒரு நல்ல உபாயம் ஆகும். எடை கூடுவதற்கு எதிரான போராட்டக்காரன் என்றே புகழ் பெற்றுள்ள லவங்கம் தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் உகந்தது. தவிர உடலில் க்ளுகோஸ் அளவையும் கட்டுப்படுத்தும். தவிர உடலில் கொழுப்பு சேர காரணமாகும் ரேடிக்கல்களை வெளியேற்றும். சீரகத்தை ஒரு லோட்டா நீரில் இரவு முழுக்க ஊற விடவும். பின்னர் காலையில் அதை குடிக்கும் முன் ஒரு ஸ்பூன் லவங்க பொடியை சேர்த்துக்கொள்ளவும். தவிர இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். சீரகத்தின் சற்றே கசப்பு ருசியை தவிர்க்க எந்த இனிப்பு பொருளையாவது சற்றே சேர்த்துகுடிக்கலாம். சீரக நீருடன் எலுமிச்சைசாறு மற்றும் வெந்தியத்தை சேர்த்தும் குடிக்கலாம்.