சுகாதாரப் பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்ய திட்டம்

தும்கூர், செப் .25- கர்நாடகா மாநிலத்தில் சுகாதார பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்யவும் மற்ற ஒரு நாளில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த தகவலை முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை சுகாதார பணியாளர்கள் வேலை செய்யவும், மற்ற நாட்களில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பசவராஜா பொம்மை கூறினார்.
தும்கூரில் பேசிய அவர், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருவதாக கூறினார். மருத்துவர் விடுப்பில் இருந்தால், அவர்களுக்கு சிகிச்சை கிடைக்காது. எனவே விடுமுறையை மாற்றும் எண்ணம் ஏற்பட்டுள்ளது, என்றார்.