சுங்க சாவடி வரிக்கு கடும் எதிர்ப்பு

பெங்களூர் : மார்ச். 14 – புதிதாக திறக்கப்பட்ட பெங்களூர் மைசூர் 10 வழி அதிவிரைவு சாலையை பயன் படுத்துவோரிடம் இன்று முதல் கட்டண வசூலிப்பு துவங்கியுள்ள நிலையில் இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .கட்டண வசூலிப்பை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . ராம்நகர் தாலூக்காவின் சேஷகிரி ஹள்ளி தோல் கேட் அருகில் நடந்து வரும் போராட்டத்தால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தவிர பெங்களூரு தெற்கு பகுதியின் கனமினிக்கே அருகில் உள்ள தோல் கேட் அருகில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ரங்கநாத் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது போராட்டக்காரர்கள் மத்திய மற்றும் மாநில பி ஜே பி அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து பஸ்களில் நிரப்பிக்கொண்டு சென்று வருவதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞசாலையின் அக்கம் பக்கத்துக்கு கிராமங்கள் மீது கண்காணிப்பில் உள்ளனர். தோல் கட்டண வசூலிப்பு துவங்கிய முதல் நாளே மக்கள் போராட்டங்களில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞசாலை பணிகள் இன்னும் முடியாத நிலையில் கட்டணம் வசூலிப்பதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல இடங்களில் ம ஜ தா , காங்கிரஸ் மற்றும் கன்னட ஆதரவு இயக்க தொண்டர்கள் போராட்டம் நடத்தி கட்டண வசூலிப்பு மைய கேட்களை சேத படுத்தியுள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாவலுடன் இந்த பத்து தட அதிவேக சாலையில் இன்று முதல் கட்டண வசூலிப்பு துவங்கியுள்ளது.
சாலையின் நடுவில் பால் கேன்களை வைத்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
சாலை பணிகள் இன்னும் முடிய வில்லை தவிர கட்டணம் வசூலிக்க சரியான முன்னயேற்பாடுகளை செய்ய வில்லை என்றும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு கட்டண வசூலிப்பு வேண்டாம். சாலை பணிகள் முழுதும் முடிந்த பின்னர் கட்டணம் வசூலியுங்கள் என போராட்டக்கார்கள் வற்புறுத்தியுள்ளார்.