சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை, ஆக. 29- தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில், நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். பாபநாசம் அகஸ்தியர் அருவி போன்று ஆண்டுதோறும் இந்த அருவியிலும் தண்ணீர் விழுவது வழக்கம்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மணிமுத்தாறு அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்வார்கள்.
இந்த நிலையில் நெல்லை மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் 4 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவி பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.