சுவற்றில் மோதிய கார்

பெங்களூர்: ஜூன். 8 – மிக வேகமாக வந்த கார் ஒன்று பிரசார் பாரதி கட்டிட சுவர் மீது மோதியதில் அதன் ஓட்டுநர் காயமடைந்துள்ள சம்பவம் இன்று காலை ராஜ்பவன் வீதியில் நடந்துள்ளது . ராஜ்பவன் வீதியில் உள்ள பிரசார் பாரதி சுவர் மீது அதிகாலை மூன்று மணியளவில் கார் மோதியதில் சுவர் இடிந்து விழுந்து கார் உள்ளே நுழைந்துள்ளது. ஓட்டுநர் காரை அதி வேகமாக ஒட்டியதன் விளைவாய் திருப்பத்தில் காம்பௌண்ட் உள்ளே நுழைந்துள்ளான். இந்த சம்பவத்தில் கார் ஓட்டுனருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து ஹை கிரௌண்ட் போக்குவரத்து போலீசார் வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.