சுவிஸ் ஓபன் பாட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி

பேசல், மார்ச் 25- சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் ஓபன் 2024 பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி கண்டு வெளியேறினார்.சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்தும், சீன தைபே வீரர் லின் சுன்-இயும் மோதினர்.
இதில் லின் 15-21, 21-9, 21-18 என்ற செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.முதல் சுற்றில் வெற்றி கண்ட கிடாம்பி,
அடுத்த 2 செட்களிலும் புள்ளிகளை கோட்டை விட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
2022-ம் ஆண்டுக்குப் பிறகு கிடாம்பி காந்த் முதன்முறையாக உலக பாட்மின்டன் சம்மேளன (பிடபிள்யூஎஃப்) போட்டிகளின் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.