சுவையான ரசமலாய்


இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அத்தகைய ருசியான இனிப்பான தின்பண்டங்கள் பட்டியலில் ரசமலாய்க்கு தனி இடம் உண்டு இதை எப்படி செய்வது என்பதை இனி அறியலாம்
தேவையான பொருட்கள்
பாசுந்தி ரசம்
பால் – ஒண்டரை லிட்டர்
சர்க்கரை- அரை கிலோ
பிஸ்தா மற்றும் பாதாம் துண்டுகள் – கால் கப்
ரசகுல்லா ( பன்னீர் உருண்டைகள்) செய்ய
பால் – இரண்டு லிட்டர்
வினிகர் – ஒன்றரை ஸ்பூன்
(எலுமிச்சை பழ சாறையும் பயன் படுத்தலாம் )
சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – மூன்று கப்
செய்யும் முறை: முதலில் இரண்டு லிட்டர் பாலை நன்றாக காச வேண்டும் பின்னர் பால் முழுதுமாக உடைந்து போகும் வரை வினிகர் அல்லது எலுமிச்சை சாறை போட்டு நன்றாக கலக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் மீது சல்லடை வைத்து அதன் மீது மெல்லிய துணி போட்டு உடைந்த பாலை துணி மீது போட்டு மேலிருந்து நீரை ஊற்றியபடி கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். பாலில் புளிப்பு சேர்ந்துள்ளதால் நீர் ஊற்றி புளிப்பு அம்சத்தை நீக்க வேண்டும். பின்னர் துணியை முட்டை கட்டி அதன் மீது ஏதாகிலும் பாரம் வைத்து சற்று நேரம் விட்டு விடவும். நீர் அம்சம் முழுதும் இறங்கி வெறும் பன்னீர் மட்டுமே மிஞ்சும் போது அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக காய வைக்கவும். பின்னர் இதை ஒரு பெரிய அளவிலான உருண்டைகள் செய்து அதை தட்டி சப்பையாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒன்றரை லிட்டர் பாலுக்கு அரை கிலோ சர்க்கரை போட்டு பாலை சுமார் அரை அளவுக்கு ஆகும் வரை கொதிக்க விடவும். பின்னர் தீயை நிறுத்தி கேசரி போட்டு பால் ஆற விடவும். வேறு புறம் ஒரு கப் சர்க்கரை மூன்று கப் அளவிற்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும். ஏற்கெனவே செய்து வைத்துள்ள பன்னீர் தட்டைகளை அதில் போட்டு 8 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். தட்டைகள் உப்ப துவங்கும் போது தீயை அணைத்து பன்னீரை அதில் இருந்து எடுத்து கைகளால் அழுத்தி அதில் உள்ள சர்க்கரை நீரை சேர்த்து வைத்து கொள்ளவும். பின்னர் ஆரிய பாலின் கலவையில் பன்னீரை போட்டு அதில் பாதாம் மற்றும் பிஸ்தா துண்டுகளை போட்டு ஒரு மணி முதல் இரண்டு மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து பின்னர் எடுத்தால் அப்பா…என நீங்கள் மூக்கில் விரலை வைக்கும் அளவில் நீங்கள் பிரபல இனிப்பு கடைகளில் பார்த்து வாயில் நீர் சுரந்த சுவையான ரசமலாய் இதோ உங்கள் எதிரில் .