சூப்பர் ஸ்டார் சிறந்தவர்: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம்

சென்னை, ஆக. 12- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படம் பார்த்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இப்படத்தை புகழ்ந்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஜெயிலர் படத்தை மிகவும் ரசித்தேன். சூப்பர் ஸ்டார் மிகவும் சிறந்தவர். நெல்சன் மீண்டும் நிரூபித்துவிட்டார். டார்க் காமெடி காட்சிகளை மிகவும் ரசித்தேன். பின்னணி இசையும் அனிருத்தும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை” என்று குறிப்பிட்டுள்ளார்.