சூளகிரி அருகே விபத்து 3 பேர் பலி

கிருஷ்ணகிரி,நவ.26-
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி கிராமம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த 5 பேரில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.