செக் பவுன்ஸ் – இயக்குனர் குருபிரசாத் கைது

பெங்களூர்,ஜன.13-
செக் பவுன்ஸ் வழக்கில் மாத், எட்டேலு மஞ்சுநாத் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் குருபிரசாத்தை கிரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிறகு இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தன்னுடன் பணிபுரியும் ஸ்ரீநிவாஸ் என்பவரிடம் குரு பிரசாத் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். படம் எடுப்பதாக கடன் வாங்கிய குருபிரசாத், பிறகு கொடுக்காமல் இருந்துள்ளார்.பணம் கேட்க சென்றவர்கள் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே குருபிரசாத் மீது சீனிவாஸ் செக் பவுன்ஸ் வழக்கு தொடர்ந்தார்.
செக் பவுன்ஸ் வழக்கில் என்ஐ சட்டத்தின் கீழ் குருபிரசாத் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
எனவே கிரிநகர் போலீசார் குருபிரசாத்தை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.