
புதுடெல்லி, ஆக. 7- சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதம் எனக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் அவரது மனைவி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீர்ம் கோர்ட்டு, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று கூறி செந்தில் பாலாஜி கைது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜி கைதுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது திமுக வட்டாரத்திலும் கலக்கத்தை உண்டு பண்ணி உள்ளது. மேலும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பதால் அவரிடம் முக்கிய வாக்குமூலம் பெறப்படும் என்றும் அதன் மூலம் மேலும் பல தமிழ்நாட்டில் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பு நிலவுகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பி இருந்த திமுக வட்டாரம் கடும் அதிர்ச்சியை சந்தித்து உள்ளது