சென்னையிலும் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை : நவம்பர் 11-
சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து இருப்பதால் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கி உள்ளனர்.அதிகாலையில் பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் காற்றின் தரம் குறைய தொடங்கி உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 100- 200 வரை பதிவாகி உள்ளது. பெருங்குடியில் 169, ராயபுரத்தில் 121, மணலியில் 109, கொடுங்கையூரில் 112, அரும்பாக்கத்தில் 134 புள்ளியாகவும் காற்றின் தர குறியீடு பதிவாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி 230 வேலூரில் 123, கடலூரில் 112 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது.
இதன் காரணமாக ஆஸ்துமா , இருதய நோய் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இன்றும் நாளையும் பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்படும் என்பதால் காற்றின் தரம் மேலும் மோசமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.காற்றின் தரக் குறியீடு 0 – 50 வரையில் இருந்தால், காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். அதுவே, அக்குறியீடு 400 – 500 ஆக இருந்தால், காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாக அர்த்தம்.இதனிடையே டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாய அளவை தாண்டி நீடிப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஆனந்த் விகாரில் காற்றின் தரக்குறியீடு 28, ஆர்கே புரத்தில் காற்றின் தரக்குறியீடு 220 என்ற அளவில் உள்ளது.