சென்னையில் பரவலாக மழை

சென்னை: செப்.27- மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை போரூர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், கொளத்தூர், நந்தம்பாக்கம், ஆலந்தூர், அசோக்நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.