சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை: ஆகஸ்ட் 18-
சென்னையில் உள்ள தொழில் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை (Chennai IT raid) நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலையில் இருந்து வருமான வரி சோதனை நடைபெறுகிறது. இரும்பு பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல தொழில் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிறுவனம் இரும்பு பொருள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் தான் காலை முதலே சோதனையானது நடைபெற்று வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனையில் வருமான வரித்துறை ஈடுபட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது. நிறுவனத்திற்கு சொந்தமான 10 க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் ஒரே நேரத்தில் சென்ற ஐடி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனை தொடர்பாக விரைவில் வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் சிவகாசியில் உள்ள பிரபல பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ஐடி ரெய்டு நடைபெற்றது. வரி ஏய்ப்பு புகாரில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தினர். மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையின் போது, கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கியதாக சொல்லப்பட்டது.