சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா

சென்னை: ஜன.14
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை சென்னை தீவுத் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமி நாதன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், பி.கே. சேகர் பாபு, டி.ஆர்.பி. ராஜா, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்க பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் த.வேலு, இ.பரந்தாமன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் க.மணிவாசன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.